Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மார்ச் 19 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பிலும், கவனயீர்ப்புபோராட்டத்திலும் செவ்வாய்க்கிழமை (19) பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் ஈடுபட்டுள்ளனர் .
அரசாங்கத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு, மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்காமை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாதுள்ள சம்பள அதிகரிப்பை வழங்க கோருதல் போன்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்பட்டதாக, தென்கிழக்குப் பல்கலைக்ககழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன் தெரிவித்துள்ளார் .
நீண்ட காலமாக இருந்து வரும் எமது கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட தரப்பினர்களால் தீர்வுகள் வழங்கப்படாமல் நீடிக்குமானால் மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்காலத்தில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
45 minute ago
50 minute ago