2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

நோய் காவு வண்டி - பேருந்து விபத்து ; மூவர் காயம்

Janu   / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி மூவர் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன்,  நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும்  நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வ.சக்தி         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X