2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

நகை, பணம் திருட்டு

Janu   / 2025 மார்ச் 05 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு  நகை  பணம் திருடப்பட்ட சம்பவமொன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை(4) இரவு   இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக புதன்கிழமை(5) அன்று காரைதீவு பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரமலான் நோன்பு காலம் என்பதால் வீட்டின் உரிமையாளர்கள் இரவு வணக்க வழிபாட்டிற்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு வந்து  இரவு 12 மணியளவில்   உறங்கிய வேளை   குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன்  அதிகாலை  குறித்த  வீட்டின் உரிமையாளர்   நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி  மற்றும் வீட்டின் ஜன்னல்  உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து பின்னர்   வீட்டை சோதனை செய்த வேளை தங்க நகைகள் பணம்  திருடப்பட்டுள்ளதை  அவதானித்துள்ளார்.

மேலும்  சம்பவம் தொடர்பில்  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில்  காரைதீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   ஆர். எஸ். ஜெகத்  வழிகாட்டுதலில்    காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்   விசாரணைகளை   முன்னெடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X