Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 17 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை(17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் சரியான நீதியைப் பெற்றுக் கொடு, சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் குறைக்கப்பட்டது என்? உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வைத்தியசாலையின் நிர்வாக சேவைகளுக்கும், வைத்திய சேவைகளுக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு இவ்வாறு தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் செயலாளர் ஏ.ஜி.எம்.நசூஹான், அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திருமதி.வ.புவிதர், உள்ளிட்ட தாதியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago