Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தன.இந்த நிலையில் குறித்த திருட்டுச்சம்பங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை இனங்கண்டிருந்தனர்.
அத்துடன் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணை தொடர்பு கொண்டு குறித்த சந்தேக நபர் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago