2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் மரணம்

Janu   / 2024 ஜூன் 30 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை  பகுதியில் மது போதைக்கு அடிமையான நபர் ஒருவர், தனது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி குத்தியபோது முழங்கைக்கும் புஜத்துக்கும் இடையிலான தசைப்பகுதியின் நாடி நரம்பு அறுந்து குருதி வெளியேறியதில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

ஒரு குழந்தையின் தந்தையான இவர், போதைக்கு அடிமையாகி, மனைவியுடன் முரண்படும் விடயமாக பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் சம்பவ தினத்தன்று போதையில் மனைவியை தாக்க முற்பட்ட போது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்ற ஆத்திரத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் முறைப்பாட்டினை பதிவு செய்து விசாரணைகள் மேற்கொண்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அதிக குருதி வெளியேற்றமே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

எச்.எம்.எம்.பர்ஸான்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .