2025 ஜனவரி 29, புதன்கிழமை

ஜனாஸா எரிக்கும் போது வாப்பா எங்கு இருந்தீங்க

Freelancer   / 2024 நவம்பர் 08 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான் 

ஜனாஸாக்களை எரிக்கும் போது, நீங்கள் எங்கு வாப்பா இருந்திங்கள், என்று அதாவுல்லாஹ்விடம் கேள்வியெழுப்பியுள்ள  'வி ஆ வண்'( WE ARE ONE ) அமைப்பின் இணைப்பாளர்  முகம்மட்  ரஸ்மின், உங்களுடைய பாடல், கேலி, கிண்டல் எல்லாம், மக்களிடம் எடுபடாது. நீங்கள், கோட்டாபயவுக்கு கூஜா தூக்குவதற்கு மட்டுமே சரியான ஆள் என்றும் தெரிவித்துள்ளார். 

 உங்கள் காமெடியை நாங்கள் ரசிக்கின்றோம் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஜனாஸா எரிக்கின்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்.சீலை கட்டிய  போராட்டம் எதுக்கு நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது உங்களுக்கு கிண்டலா? ஜனாஸாவை எரித்தது உங்களுக்கு கேலியா? என்றும் கேட்டுள்ளார்.  

அம்பாறை ஊடக மையத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த சில நாட்களாக தேர்தல் மேடைகளில் வேட்பாளர் ஏ.எல்.எம்  அதாவுல்லாஹ் பேசுகின்ற  வார்த்தைகள் எம்மால் கேட்க முடிகின்றது. 20 ஆவது அரசியல் சீர்த்திருத்தத்திற்கு கை நீட்டியதன்  காரணமாக ஜனாசா எரிக்கப்பட்டது என்று மக்கள் கதைக்கின்றார்கள். ஆனால் அது ஒரு மாபெரும் சட்டம் அதை இவ்விடத்தில் சொல்ல முடியுமா? அதைப் பற்றி மக்களுக்கு  தெரியுமா? என வேட்பாளர் அதாவுல்லாஹ் கேலியாக  கேட்கிறார். 

முதலில் நான் ஒன்றை அவரிடம்  கேட்க விரும்புகின்றேன். சகோதரர் அதாவுல்லாஹ் முதலில் ஒன்றை  புரிந்து கொள்ளுங்கள். இது பாராளுமன்ற தேர்தல் களம்.இங்கு   சிறந்த நகைச்சுவையாளரை தெரிவு செய்யும் களம் அல்ல. டிவியின் நிகழ்ச்சி அல்ல. காமெடி நடிகர்களை தெரிவு செய்கின்ற ஒரு நிகழ்ச்சி இல்லை என்பதை வேட்பாளர் அதாவுல்லாஹ்   புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது சிலருக்கு  பொழுது போக்குவிற்கு   அதாவுல்லாஹ்வின்  காணொளிகளை பார்த்தால் போதும் என்ற நிலை  மாறி இருக்கிறது. பாராளுமன்ற வேட்பாளர் மாதிரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாதிரி ஒரு கட்சியினுடைய தலைவர் மாதிரி நடந்து செயல்படுகின்றீர்களா? நீங்கள் பேசுகின்ற  இவ்வாறான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்கின்றது என்று நினைக்கின்றீர்களா? என்று கேட்கின்றேன்.

ஆனால்  காமெடிக்காக இளைஞர்கள்  இந்த பேச்சுக்களை கேட்கின்றார்கள். தேர்தல் காலத்தில் இது நல்லா இருக்கும். அதாவுல்லாஹ் பேச்சை கேட்டுவிட்டு  போவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் அதாவுல்லாஹ்  நீங்கள் பெரிய அறிவாளி என்று இங்கு யாரும் உங்கள் பேச்சை  கேட்கவில்லை. குறிப்பாக 20 க்கு கையை தூக்கியது மாபெரும் ஒரு சட்டம் அது  . உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்களே  அந்த சட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்கு பாட நடத்த வேண்டுமா என்று கேட்கின்றோம்.

  இவ்வாறானவர்களின் இலட்சணங்களை  நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? மஹிந்த ராஜபக்ச  ஜனாதிபதியாக இருக்கின்ற வேளை  தனக்கு இருக்கின்ற அதிகாரம் போதாது. மேலதிக அதிகாரம் வேண்டும் என்று 17 க்கு பிறகு 18 ஆவது  அரசியல் சீர்திருத்தத்தை கொண்டு வருகிறார்கள். அதற்கும் எம்மவர்கள்  கை தூக்கினார்கள்.தொடர்ந்து  18 ஆவது அரசியல் சீர்திருத்தத்தின்  பின்னர் ஆட்சிக்கு வந்தவர்  அதிகாரத்தை குறைக்க போகின்றேன் என்று கூறி 18 வது அரசியல் சீர்திருத்த்தற்கு  பதிலாக   19 ஆவது சட்டத்தை மைத்திரி  என்பவர்  கொண்டு வந்தார். அதற்கும் எம்மவர்கள்  கை தூக்கினார்கள். தொடர்ந்து மேலதிக  அதிகாரம் வேணும் குறைந்த அதிகாரம் தேவையற்றது என  கூறி 20 அரசியல் சீர்திருத்தத்தை  வலியுறுத்தி  கோட்டபாய  ராஜபக்ஷ  கொண்டு வந்தார். 20 வது அரசியல் சீர்திருத்தம் அதற்கும் எம்மவர்கள்  கை தூக்கினார்கள்.

எமது  கேள்வி யாதெனில்  நீங்கள்  கடந்த தேர்தல் மேடைகளில்  எதைச் சொல்லி வாக்கு கேட்டீர்கள். கோட்டாவை எப்படி காட்டினீர்கள் இப்போது கோட்டபாய ராஜபக்ஸவினை  எப்படி காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு 20 வது அரசியல் சீர்திருத்தம் என்ற பேரில் அனைத்து அதிகாரத்தையும் தூக்கி கையில் கொடுத்தால் என்ன பண்ணுவார். பேயாட்டம் ஆடுவார்.   நாடு நடுத்தெருவுக்கு வந்து நிற்கும் என   படித்தவர்கள் சொன்னார்கள் அழுது புலம்பினார்கள் கெஞ்சி கேட்டார்கள் அல்லவா?
 இவ்விடயம்  அதாவுல்லாஹ்க்கு  புரியவில்லையா?  என்றும் வினவினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .