Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூலை 22 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சராப்டீன் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.ஜி.எம்.கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், மலேரியா தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம்.நௌஷாட் உள்ளிட்ட வைத்தியர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
றியாஸ் ஆதம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago