2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

சுகாதார சேவைக்கு QR அறிமுகம்

R.Tharaniya   / 2025 மார்ச் 02 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள்  தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR  குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும்  பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில்  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான இந்த QR குறியீட்டை ஸ்டிக்கர் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (1) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X