Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற பிராந்திய ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
"அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதேசங்களில் நிலவும் சுகாதார பிரச்சினைகள் அவற்றை நிபர்த்திக்க ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள், சுகாதார பிரச்சினைகளை தீர்க்க ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கடந்த காலங்களில் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள். சுகாதாரத்துறைக்கு ஊடகவியலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்பினை பாராட்டுகின்றேன்.
மக்கள் சுகாதாரத்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் வழங்கும்போது தான் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க முடியும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கி வருகின்றது" என தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago