2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

சீமெந்து மூடைகளை திருடியவர் தப்பியோட்டம்

Editorial   / 2025 ஜனவரி 08 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூடைகளை வீட்டின் முன் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து திருடிய சந்தேக நபர் தப்பியோடி உள்ள நிலையில் பொலிஸார் அவரையும் அவரது வாகனத்தையும் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எஸ் எம் ஏ ரஹீம் தெரிவித்தார் 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த சீமெந்து மூடைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன 

குறித்த வீட்டின் கட்டடப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வீட்டை பூட்டி விட்டு அடுத்த நாள் பணிகளுக்காக வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே இருந்த 13 சீமெந்து மூடைகளை தனது வாகனத்திலேயே திருடிச் சென்றுள்ள நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது 

இதனை அடுத்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது சீமெந்து மூடைகளை திருடிய நபர் தனது வீட்டின் ஒரு பகுதியில் சீமெந்து மூடைகளை மறைத்து வைத்திருந்த நிலையில் அங்கிருந்து 13 சீமெந்து மூடைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரையும் அவரது வாகனத்தையும் பொலிஸார் தேடி வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X