2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சிறு விபத்தால், 1 கிலோ மீட்டர் தூரம் வாகன நெரிசல்

Janu   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவம்  அம்பாறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(1)  இடம்பெற்றுள்ளது.

காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலம் உள்ள பகுதியில் செவ்வாய்க்கிழமை(1) இரவு பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் கல்முனை அக்கரைப்பற்று நோக்கி சென்ற வாகனங்களும், அம்பாறை நோக்கி மாவடிப்பள்ளி ஊடாக செல்ல முற்பட்ட வாகனங்களும் போக்குவரத்து செய்ய முடியாமல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தரித்து நின்றன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு பொலிஸார் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் குறித்த விடயங்களை சீராக்கியதுடன், தொடர்ந்து குறித்த பாலத்தின் ஊடாக ஏனைய வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பல ஆண்டு காலமாக மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலமானது காணப்படுவதுடன் தற்போது உடைந்து சிதைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X