Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூலை 23 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலைஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட குடும்ப மோதலில் திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவர் மரணமடைந்திருந்தார்.
இது தொடர்பிலான வழக்கு திங்கட்கிழமை(22) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் உட்பட ஐவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .