2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

கோழிகளை திருடிவரும் முதலை

R.Tharaniya   / 2025 மார்ச் 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில்; உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

பிள்ளையாரடி நாகையா வீதியில் உள்ள  வீடு ஒன்றில் இரவு வேளைகளில்  முதலை ஒன்று உட்புகுந்து அங்கே வளர்த்துவரும் கோழிகளை பிடித்து கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த திருட்டு முதலையை பிடிப்பதற்காக வீட்டின் உரிமையாளர் முதலை உட்புகும் பகுதியில் சுருக்கு வைத்துள்ள நிலையில் முதலை சம்பவதினமானசெவ்வாய்க்கிழமை (18)  இரவு சுருக்கில் மாட்டிக் கொண்டதையடுத்து பொதுமக்கள் அதை மடக்கி பிடித்து கட்டி வைத்ததுடன் வனவிலங்கு திணைக்களம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X