Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 09 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் .
இச் சம்பவம் பொத்து விலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் வியாழக்கிழமை (9) காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது .
விபத்தில் பலியானவர் கோமாரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மென்டிஸ் அப்பு விஜயஸ்ரீ ( வயது 71 ) என்பவராவார்.
பல வருடங்களாக அவர் பிரதான வீதியில் கோமாரி மகா வித்தியாலயத்திற்கும் தபாலகத்திற்கும் இடையே உள்ள மரத்தின் கீழ் முச்சக்கர வண்டியில் நிற்பது வழக்கம். செருப்பு தைப்பதும் குடை திருத்துவதும் தொழிலாக கொண்டிருந்தவர்.
இரண்டு கால்களும் இயலாத மாற்றுத் திறனாளியான அவர் முச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து வந்து பிரதான வீதியில் கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு செல்கின்ற பொழுது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதியது . அக் கணத்தில் அவர் தூக்கி எறியப்பட்டார். அந்த இடத்திலேயே அவர் மரணமானார்.
சம்பவ இடத்திற்கு பொத்துவில் பொலிஸார் விரைந்தனர். மோதியவர் அம்புலன்சில் அனுப்பப்பட்டார். மரணமடைந்தவரின் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago