2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Janu   / 2024 ஜூன் 30 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஒருவரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் கேரளா கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற  தகவல் ஒன்றிக்கமைய  சனிக்கிழமை (29)  இரவு சந்தேக நபரை  கைது  செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  36 வயதுடைய குடும்பஸ்தர் எனவும் அவரிடமிருந்து  11,100 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .