2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Janu   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு புதன்கிழமை (11) அதிகாலை கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவல் ஒன்றினையடுத்து  மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ளனர் .

மத்தியமுகாம், கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த 43 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கைப்பற்றிய கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் என்பன களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த கேரள கஞ்சா கிளிநொச்சி பகுதியில் இருந்து பேருந்து ஊடாக  கடத்தப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X