2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

கூரையின் ஊடாக தப்பிய கைதி

Janu   / 2024 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த,  தீர்ப்பு வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றத்தின் கழிவறை கூரையை  உடைத்துக் கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் திங்கட்கிழமை (26) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

ஏறாவூர் நீதிமன்ற வழக்கொன்றில் நான்கு வருட சிறை தண்டனை  வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த 30 வயதுடைய பாலசுந்தரம் கோபிநாத் என்ற கைதியே இவ்வாறு தப்பியோடியுள்ளார். 

வேறொரு வழக்கொன்றிற்காக களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற கைதி கழிவறை கூரையை  உடைத்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர் .

ரீ.எல்.ஜவ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X