2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

கிழக்கு ரயில் தடம்புரண்டது: சேவைகள் பாதிப்பு

Editorial   / 2025 மார்ச் 26 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்

 மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்டியபகுதியில்   புதன்கிழமை (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகி  விபத்துக்கு உள்ளானதை அடுத்து மட்டக்களப்பு  புகையிரதத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு. புகையிரத்துக்குமான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

மகாகோவில் இருந்து காலை 6.00 மணிக்கு மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்து சரக்கு ரயில் பகல் 2 மணியளவில் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் தண்டவாளத்தை விட்டு விலகியதையடுத்து ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால் மட்டு புகையிரத நிலையத்துக்கான ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில் எஞ்சினை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சீர் செய்யும்வரை  கொழும்பில் இருந்து மட்டு புகையிரதத்துக்கு வரும் ரயில்கள் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டும்.
 
அதேபோன்று கொழும்பு நோக்கி பிரயாணிக்கும் ரயில்கள் ஏறாவூரில் இருந்து புறப்படுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பணிப்பாளர் அ.பேரின்பராஜா தெரிவித்தார்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X