2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

கிழக்கு ஆளுநர் - GMOA இடையில் கலந்துரையாடல்

Janu   / 2025 மார்ச் 06 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை  (05) அன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.  

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  டி. ஏ. சி. என்.  தலங்கம, ஆளுநர் செயலக  செயலாளர்  ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.  திசாநாயக்க, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்டா மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள்  பங்கேற்றனர்.

அதன்படி, வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டதுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர்  இதன் போது கூறியுள்ளார்.

ஏ.எச் ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X