2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

காத்தான்குடியில் 42 பேர் கைது

Janu   / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் சம்பவங்களுடன் தொடர்புடைய 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் போதைப் பொருட்களுடன் 15 பேரும்,கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரும், சட்டவிரோத சிகரட்களுடன் இரு நபர்களும் கசிப்பு போதை பொருள் விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 24 நபர்களுமாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 

 கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு போதைப்பொருள், சிகரட்கள், சகிப்பு தயாரிப்பு உபகரணங்கள்,எரிவாயு சிலிண்டர் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

ரீ.எல்.ஜவ்பர்கான்  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X