2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

கல்குடாவில் 16 விவசாயிகள் மீட்பு

Editorial   / 2025 ஜனவரி 21 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்  

அடைமழை வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 விவசாயிகள் கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினால் மீட்கப்படு கரைசேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விவசாயில் கிடைச்சிமடு, ஆத்துச்சேனை பிரதேச வயல்களில் சிக்கி இருந்ததுடன், வயற்பிரதேசங்களுக்கான பாதைகளும் முற்று முழுதாக வெள்ளநீரால் சூழப்பட்டிருந்தன.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின்  வழிகாட்டலில், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின் உதவியுடன் சமூகச்செயற்பாட்டாளரும் கல்குடா டைவர்ஸின் ஆலோசகருமான முபாறக் ஹாஜியார் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X