Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான முக்கியமான அறிக்கை வெளிட்டு வைக்கப்பட்டுள்ளது.
காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியும் மனித எழுச்சி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாய ஆய்வுகளுக்குமான நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது.
காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், பேராசிரியர் சமன் வீரக்கொடி, முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என் எம். அமீன், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், நாட்டில் காணி உரிமைகளுக்காகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,விவசாயிகள், துறைசார்ந்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
நிகழ்வில் 'அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் காணி உரிமை' எனும் அறிக்கை நூலை வெளியிட்டு வைத்த அதன் செயற்பாட்டாளர்கள், 'விவசாயிகளின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளை தாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
நாடு சுதந்திரம் பெற்றது தொடக்கம் அடிப்படை மனித உரிமை மீறல்களில் பிரதான ஒன்றாக திட்டமிட்ட நிலப்பறிப்புக்கள் அமைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
காணிகளை இழந்த மக்கள் தமது காணி உரிமை சார்ந்து மிக நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் 4,652 குடும்பங்களினது 14,127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான ஆய்வு ரீதியான ஆவணங்கள் தொகுக்கப்பெற்றுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரட்டப்பட்டு அவர்களுடைய உண்மையான பிரச்சினைகளை ஆய்வு ஆவணங்களாக உருவாக்கியுள்ளோம் இன மத பேதங்களுக்கப்பால் இந்த ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால அரசுகளின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுடன் இதனூடாக பாதிப்பை இழைத்தவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்
அதேவேளை, எதிர்காலத்திலும் மக்களது காணிகளைப் பறிக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் அரசினதும் அல்லது வேறெந்த ஆர்வக் குழுக்களினதோ வெளிச் சக்திகளினதோ கொள்கைளினால் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதற்கான இறுக்கமான சட்டங்களும் கொள்கைகளும்; அமுல்படுத்தப்பட வேண்டும்.
ஆகவேஇ இலங்கையில் காணியிழந்த அனைத்து சமூகங்களுக்குமான உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்தப்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் இலங்கையில் காணியிழந்து எவரும் நடுத் தெருவில் நிற்கும் நிலை வந்துவிடக் கூடாது.' என்று வலியுறுத்தினர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago