2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

கட்டுப்பணம் செலுத்திய ஐ.ச.கூ

R.Tharaniya   / 2025 மார்ச் 18 , பி.ப. 02:47 - 0     - 13

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள  தேர்தல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(18)  அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக காரைதீவு பிரதேச சபை வேட்பு மனுக்களுக்கான கட்டுப்பணம் இன்று (18) அம்பாறை மாவட்ட  தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.

இதன் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹக்கீம் செரீப் உட்பட  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் .எம்.  அகுவர்  ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

மேலும் எதிர்வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் சரீப் ஹக்கீம் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X