2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மாயம்

Janu   / 2024 மே 23 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் ,  கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என மீனவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த திங்கட்கிழமை (20) சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில்  கடலுக்கு சென்ற வட்டாரம் - 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய குட்டிராசா சசிக்குமார் மற்றும் 22 வயதுடைய முருகையா சுஜந்தன் ஆகிய இருவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேலும் , சல்லி பிரதேச மீனவர்கள் சிலர் காணாமல் போன இருவரை தேடி கடலுக்கு சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர் .

ஏ. எம். கீத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .