2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு

Janu   / 2024 டிசெம்பர் 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்முனை பிராந்திய பாலியல் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த நடைபவனியும் விழிப்புணர்வு செயலமர்வும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிமை (02) இடம்பெற்றது.

பிராந்திய பாலியல் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.ஜலால்டீனால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு “ உரிமைப் பாதையில் செல்”எனும் தொனிப்பொருளில் வைத்திய அத்தியட்சகர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், மாவட்ட எய்ட்ஸ் குழு உறுப்பினர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன், பிராந்திய பாலியல் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.ஜலால்டீன், சம்மாந்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி ஆகியோர் விரிவுரையாற்றினர்.

சர்வதேச எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், HIV யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் அதனால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 றியாஸ் ஆதம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .