Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 27 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் மத ஸ்தலத்தில் விஷேட பிராத்தனை மேற்கொண்ட விடயத்தினை காழ்ப்புணர்ச்சி கொண்ட சில எதிர்கட்சிக்காரர்கள் திரிவு படுத்தி நாம் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக எம்மீது வீண்பழி சுமத்திள்ளனர் அவர்களின் இச்சேறு பூசும் செயற்பாட்டினை மக்கள் நன்கு அறிவர் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற உரிமையின் அடிப்படையில் நாம் பள்ளிவாசல்களுக்கு துஆ பிரார்த்தனை புரிவதற்காக சென்றிருந்தோம். அதனை சிலர் உண்மைக்கு புறம்பாக திரிவு படுத்தி நாம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல்கள் திணைக்களத்திற்கும், பொலிஸ் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
எனது அரசியல் செயற்பாடுகளை முடக்குவதற்கும், என்னுடைய வாக்குகளை சிதறடிக்கச் செய்யவுமே மாற்றுக் கட்சியினைச் சேர்ந்த சிலர் இவ்வாறான அவதூறுகளையும் பொய்களையும் புனைந்துள்ளனர். நாம் அரசியல் செயற்பாடுகளை தேர்தல் காலங்களில் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றபோது புனித பள்ளிவாசல்களுக்குச் சென்று விஷேட துஆப் பிரார்த்தனைகள் புரிவது வழக்கமானதாகும்.
அதன் அடிப்படையிலேயே நாம் துஆப் பிரார்த்தனை புரிவதற்காக சென்ற விடயத்தினை சிலர் திரிவு படுத்தி எம்மீது வீணாக சேறு பூச வேண்டும் என எண்ணம் கொண்டு நாம் ஊர்வலத்தினை மேற்கொண்டதாகவும், பேரணிகளை புரிந்ததாகவும் பொய்க்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். உண்மைக்குப் புறம்பாக இடம்பெற்ற இவ்விடயத்தினை நாம் நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கின்றோம். எமது பக்க நியாயங்களையும் உண்மைகளையும் நாம் அங்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம். இவ்விடயத்திலிருந்து நாம் விடுபட்டிருந்தாலும் அதற்கான வழக்கு தொடர்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்கள் இவ்விடயத்தின் உண்மைத் தன்மையினை நன்கு அறிந்து வைத்துள்ளனர். இம்மாவட்ட மக்களும், அக்கரைப்பற்று பிரதேச பொதுமக்களும் இதற்காக வேண்டி வீணாக கலக்கம் அடையவோ சலசலப்புகளுக்கு அஞ்சிக் கொள்ளவோ தேவையில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago