Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 17 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை நாட்டில் தற்போது பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு துறைசார் மேம்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் நமது நாடு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் ஐரோப்பிய நாடுகளைப் போல் மக்கள் நலச் செயற்பாடுகள் உள்ள நாடாக மிளிரும் .
அப்போது நம் நாட்டு மக்கள் அனைத்துத் துறைகளிலும் வலுப்பெற்றவர்களாக வாழும் சூழல் ஏற்படும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 'இப்தார்' நோன்பு திறக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைப்பின் தலைவர் ஏ.எல். பதுறுதீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப், பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்றூப், கணக்காளர் ஐ.எம். பாரிஸ், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சீ.ஜலால்டீன், தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பரீட், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக எம்.எம்.நிஜாமுடீன், எஸ்.ஜாபீர், சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுச் சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், அரிசி ஆலை உரிமையாளர்கள் உண்மையில் இக்கால கட்டத்தில் நம் நாட்டுக்கு காத்திரமான பங்களிப்பளிப்பினை நல்கி வருகின்றனர். அரிசித் தட்டுப்பாடு நிலவுகிறது போது அதை நிவர்த்திக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் மக்களின் வரவேற்பை பெறும் வகையில் பெரும்பாலும் அமைகின்றன.
இந்நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்ப் பிரச்சினை காணப்படுகின்றது. அரிசித் தட்டுப்பாடு நிலவுகின்றபோது அநேகமானவர்கள் அம்பாறை மாவட்டத்தினை நோக்கிய பார்வையினை செலுத்துகின்றனர். ஏனெனில் இந்நாட்டின் நெல் உற்பத்தியில் அம்பாறை மாவட்டமானது எப்பொழுதும் கணிசமான பங்களிப்பினை செய்து வருகின்றது. இந்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவும் வேளையில் இம்மாவட்டத்தின் நெல் அறுவடைக்குப் பின்னரான அத்தட்டுப்பாடு வெகுவாக நிவர்த்தி செய்யப்பட்டிப்பதனை நாம் கண்ணூடாக கண்டுள்ளோம்.
தெங்குச் செய்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அண்மைக்காலத்தில் தேங்காய்த் தட்டுப்பாடு வெகுவாக ஏற்பட்டது. இதற்கு கடந்த கால அரசாங்கத்தின் செயற்பாடுகளும் பிரதான காரணமாக அறியப்பட்டுள்ளது. தெங்குச் செய்கை கான உரம் வழங்கப்படாமை அத்தோடு தெங்குச் செய்கை யாளர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் போன்றவை இனங்காணப்பட்டுள்ளன. இதுதவிர காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் தெங்குச் செய்கை அறுவடையில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அனைத்து வளங்களும் ஒருங்கே அமைந்துள்ள நம் நாட்டினை விருத்தி செய்வதற்காக அனைவரும் ஒற்றுமைப் பட்டு செயல்பட வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். இந்நாட்டில் உள்ள வர்த்தகத் துறை சார்ந்தவர்கள் ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் அதிக ஆர்வத்தையும் கவனத்தையும் செலுத்தி செயற்படுகின்றது நம்நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டக் கூடிய நிலைமை ஏற்படும் என்றார்.
எம்.ஏ.றமீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago