2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இரு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Janu   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மலையடிக்கிராமம் 01 பகுதியில் கடந்த பெப்ரவரி  03 ஆம் திகதி வீடொன்று உடைக்கப்பட்டு தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது வீரமுனை மற்றும் மலையடிக் கிராமம் பகுதிகளை சேர்ந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் வசம் இருந்து இரண்டு  தொலைபேசிகள்  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன்  கடந்த ஜனவரி  26 ஆம்  திகதி  மையவாடி பகுதியில் வயதான பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து  நகை மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் குறித்த இரு சந்தேக நபர்களும் தொடர்புள்ளமை பொலிஸ் விசாரணையில் வெளியாகியுள்ளது.

அத்துடன்  சந்தேக நபர்கள் இருவரும்  கைது செய்யப்பட்டதாக தகவல் அறிந்த,  பாதிக்கப்பட்ட  வயதான பெண் செவ்வாய்க்கிழமை  (04)  அன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது  வீட்டில் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி  இரவு நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் திருடிச் செல்லப்பட்டிருந்ததாக  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மேற் குறித்த இரு சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போது பாண்டிருப்பு 02 பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்த கொள்ளையடித்த நகைகளையும் மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .