2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இரவு நேரங்களில் விசேட சுற்றி வளைப்பு

Janu   / 2024 மே 09 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி  ஏ. எம்.முகம்மது இஸ்ஸதீன் வியாழக்கிழமை (09) தெரிவித்த்துள்ளார் .

உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள், பேக்கரிகள் என்பன திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்L வருவதாகவும்  இரவு நேரங்களிலும் விசேட சுற்றி வளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்  தெரிவித்த்துள்ளார் .

பரிசோதனையின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத உணவுப் பண்டங்கள், பொருட்கள், காலவதியான பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வருவதாகவும், உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்த்துள்ளார் .

உணவு சட்ட விதிமுறைகள், நுகர்வோர் விவகாரசட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகளுக்கமைய வேண்டுமெனவும், உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றின் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் கையுறை போன்றவற்றை பாவிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார் .

மேலும் ,உணவு பாதுகாப்பு சட்ட திட்டங்களை மீறி பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கண்டுபிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வாறான நிலையங்கள் மூடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.எம்.ஹனீபா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .