2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இரத்ததானம் வழங்கிவைப்பு

Janu   / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் இயங்கிவரும் ஜ.டி.எம் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் (IDM EASTERN CAMPUS )   6 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 'மனித உயிர் அரியது அதைக் காக்கும் இரத்தம் பெரியது இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தத்தை தானமா வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு பயினிர் வீதியிலுள்ள  பல்கலைக்கழக  கட்டிடத்தில் சனிக்கிழமை (07)  இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் தே.சசிகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட  இரத்ததான முகாமில் அங்கு கல்வி கற்றும் மாணவர்கள் மற்றும் ஜ.டி.எம். ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கி வைத்தனர்.

 கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .