Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 03 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரையம்பதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கோரி திங்கட்கிழமை (03) காலை ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
ஆரையம்பதி பிரதேச பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஆரையம்பதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதி வேண்டும் வாள் வெட்டுச் சம்பவங்களை அனுமதிக்க கூடாது.
சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் இதன் போது முன் வைக்கப்பட்டன.
இது தொடர்பான மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரினால் மண்முனைப் பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை தாங்கி நின்று நீதி வேண்டிய கோசங்களையும் எழுப்பினர்.
கடந்த 20ம் திகதி ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஆரையூர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சஞ்சே பாரதி கிருஷ்ண பாரதி பாலேந்திரன் கிருஷ்ண பாரதி ஆகிய இரு இளைஞர்கள் அங்கு வந்த ஆறு பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆறு பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் இன்னும் கைது செய்யப்பட வில்லை என தெரிய வருகிறது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago