2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

“ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க”

Janu   / 2024 ஜனவரி 04 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக காணப்படுவதாகத் தெரிவித்து வியாழக்கிழமை (04) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமூக ஆர்வலர்கள்  முறையிட  சென்றுள்ளனர்.

பல வருட காலமாகக் குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும், இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாகக் குறித்த விடயம் தொடர்பில் முறையிடத் தாம் வருகை தந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் கடந்த 201 ஆம் ஆண்டு உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையினால் 50% மாணவர்களே சித்தியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த காலங்களில் குறித்த பாடசாலையில் உயர்தரம் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் வெளிப்பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது.

மாணவர்கள் குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், பெற்றோரின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்துல்சலாம் யாசீம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .