2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

அமீர் இடைநிறுத்தம்

R.Tharaniya   / 2025 மார்ச் 24 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் ஏ.கே.அமீர்யை  தற்காலியமாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, அவர் மேலும் தெரிவிக்கையில்,  இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே.அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேற்சைக் குழுவொன்றின் வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக அவர் அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் நடைபெறும் எனவும் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

அபு அலா 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X