2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

7 விவசாயிகள் வெள்ளத்தில் சிக்குண்டுள்ளனர்

Editorial   / 2024 நவம்பர் 26 , பி.ப. 06:07 - 0     - 33

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு  புல்லுமலை  தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளார்கள் என மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார்.

குறித்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்கு சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்திஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள்  சென்றிருந்தனர்.

இந்த நிலையில் தொடர் கடும் மழை காரணமாக அந்தபகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன் வீதிகள் பல மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேறமுடியாமல் சிக்குண்டுள்ளனர்.

இவர்களை மீட்பதற்காக கடற்படையினர் மற்றும் விமானபடையினரின் உதவியை கேட்டுள்ளதாகவும் வெள்ள நீர் அதிகமாக பாய்ந்தோடுவதால் படகில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேகம் இருள் சூழ்ந்து காத்து வீசுவாதால் விமானபடையின் கொலிகொப்டர் பெயணிக்கமுடியாத காலநிலை எற்பட்டுள்ளதாக விமானபடையினர் தெரிவித்தள்ளனா.;

இருந்தபோதும் அங்கு சிக்குண்டர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்க ப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் இவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவாதக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X