Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2021 மே 26 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவுளே ஏன்.....?
எமனுக்குக் கட்டளை இட்டாயோ...?
எங்கள் கறுப்பு வர்க்கத்தின் தலைவனைக் கொன்றுவரச்சொல்லி
மலை நாட்டின் மாபெரும் ஏவுகணை..!
எவ்வாறானத் தடைகள் வந்தாலும்
தடம் மாற்றும் மாபெரும் தலைவன்
இன்னல்கள் வந்தாலும் இடிந்துப்போக மாட்டார்
நிமிர்ந்து நின்று எதிர்கொண்டு வெற்றியாக மாற்றியமைக்கும் எங்கள் வெற்றித் தலைவன்...
வீர நடை...
கம்பீரமான பேச்சு..
அன்பின் அரவணைப்பு...
சிலிமிச்ச நகைச்சுவைப் பேச்சு... சிந்திக்கவைக்கும் செயல்கள்....
"கை உயர்த்தினால்
கதிகலங்கும் கூட்டம்"
சிறந்த முகாமைத்துவம்
தேடி வருபவரை
அரவணைக்கும் ஆற்றல்
ஐயா...!
இதுவரை....
நான் பார்த்த மனிதர்களில்
நீங்கள் மாமேதை
எங்களின் வழிகாட்டி
என்னையும் உருவாக்கியச் சிற்பி
மலையக மாற்றத்திற்காக
நம் மக்களோடு மக்களாய் நின்று போராடிய போராளி..!
உங்களைக் கண்டு வியர்ந்தவர்களில் நானும் ஒருவன்...!
ஜனநாயக ஆட்சியில்
தனித்துவ இடத்தைப் பெற்றீர்
பல கோட்பாடுகளை...
பல இலட்சியங்களை...
பல சட்டங்களை....
பல திட்டங்களை....
விதை விதைத்து...
"மலையகத்தில் ஆலமரமானீர்"
இன்றும் எம்முடன்
ஆணிவேராக இருக்கிறீர்கள்
உங்கள் விழுதுகளாக
நாங்கள் முளைத்திருக்கிறோம்...
நீங்கள் கண்ட கனவுகள்
நனவாகும் வரை...
கை கோர்த்து போராடுவோம் ஆறுபடை முருகனோடு சேர்ந்து எங்களுக்கு பக்கத்துணையாக
அருள் தாருங்கள் ஐயா...
"மண்ணில் வீழ்ந்தாலும் தொண்டமானின் தொண்டனாய் முளைத்துக்கொண்டே இருப்போம் விடியலை நோக்கி..."
"உங்களுடைய ஆத்மா
எப்போதும் எங்களோடு
உறவாடி கொண்டிருக்கும் தொண்டமான் என்ற சக்தியாய்"
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
மலையகத்தின் உச்சியிலே
சேவல் கூவினால்
உங்கள் பெயர் சொல்லும்....
சூரியனும் உதிக்கும்....
ஆக்கம்;- பெருமாள் கோபிநாத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
6 hours ago
9 hours ago