Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 மே 25 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக சிந்தனையாளரும் முற்போக்கு அரசியல் செயற்பாட்டாளரும் கவிஞருமான நிந்தவூரைச் சேர்ந்த யூ.எல்.ஹஸனார் ஷக்காப், செவ்வாய்கிழமை இரவு காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும். இவரது ஜனாஸா நல்லடக்கம், நிந்தவூரிலுள்ள பிர்தௌஸ் மையவாடியில் இன்று காலை இடம்பெற்றது.
1970களில் இடதுசாரி கொள்கை மீதான பற்றுதல் காரணமாக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட ஹஸனார் ஷக்காப், ஜூலைக் கலவரத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறுதுகாலம் சிறைவாசம் அனுபவித்தார்.
அதனைத் தொடர்ந்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பினால் கவரப்பட்டு, அக்கட்சியில் இணைந்து கொண்டார். மு.கா.வின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவிய அக்காலப்பகுதியில் உயிரையும் துச்சமென மதித்து, 1988 இல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டார். இவரை இலக்கு வைத்து ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டிலிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பினார்.
கலை இலக்கிய ஆளுமையான ஹஸனார் ஷக்காப், பல கவிதைகளையும் மெல்லிசைப் பாடல்களையும் எழுதியுள்ளதுடன், தேசிய ரீதியாக இடம்பெற்ற பல நிகழ்வுகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் அரசியல் பற்றி ஆழமான அறிவை கொண்டிருந்த இவர் பற்றிய சிந்திப்பவராக திகழ்ந்தார். அரசாங்க ஊழியரான ஷக்காப், இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
47 minute ago