2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கிண்ணியா சபருள்ளா பதில்கள்

Kogilavani   / 2016 மே 13 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே: தங்களைப் பற்றி உங்களின் மதிப்பீடு என்ன?

சுய விசாரணை மரணம் வரைக்கும் நிறுத்தற் குறியில்லாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

கே:  நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

முரண்பாடுகளில் உடன்பாடுகள், உடன்பாடுகளில் முரண்பாடுகள். இரயில் தண்டவாளங்களின் கரைகளில் இரு கோடுகள். கண்ணக் கட்டுதுல்ல. இந்த மாதிரிக் கேள்விக்கு வாயையும் சேர்த்துக் கட்டணும்.  

கே: இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
மோசமான முடிவுகளைக் கொண்டு வருகின்ற முரண்பாடுகளில் எழுகின்ற கவர்ச்சி ஒரு பேர்முடா முக்கோணம்.

கே: இலக்கியவாதி - இலக்கியப்படைப்பு ஆகியவற்றைப்பற்றி நீங்கள் எழுதியதில் எது உங்களைக் கவர்ந்தது?
எனது எழுத்துகளில் ஷோர்ட் லிஸ்ட் கிடையாது. எல்லாமே புல் லிஸ்ட்தான்.

கே: எந்த எழுத்தாளரை மிகவும் மதிக்கின்றீர்கள்?

கலப்படமில்லாத இலக்கிய நேர்மையாளர்களை மட்டும்.  

கே: உங்களை ஆச்சரியப்பட வைத்த இரண்டு நூல்களைச் சொல்லுங்கள்?

சாரி பாஸ். இரண்டு அல்ல „ஒன்றே ஒன்று.... அல்குர்ஆன். ஆச்சரியங்களின் அரசாட்சி. வியப்புகளின் அத்தாட்சி.

கே: உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன?

கொப்பி ரைட்டுக்கே நம்ம படைப்புகளுக்கு இங்கே இடமில்லை எனும் போது கோப்ரேட் லாபம் பற்றி பேசுவது கொஞ்சம் அபத்தமானது.

கே: முக நூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரனியல் பரப்பில் மலிந்து கிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஓப்பன் எக்கனமி. யார் வேண்டுமானாலும் யாவாரம் பண்ணலாம். ஆனா சட்டத்துல ஒரு மூதுரை இருக்கு 'பயர்ஸ் மஸ்ட் பீ கோஷியஸ்' அதாங்க சாமான வாங்குற நம்ம மாதிரி ஒன்னுமே தெரியாத அப்பாவி சனங்கதான் எப்பவும் சாக்கிரதையா இருக்கோனுமாம்'.

கே: உங்களின் குடும்பம் பற்றி மிகச்சுருக்கமாக?
நான் அல்லாஹ்வினால் அருள்பாலிக்கப்பட்டவன்.

கே: விருதுகள் குறித்து?
விருதுகளுக்காக இப்போதெல்லாம் விண்ணப்பம் என்ற பெயரில் கோரப்படுகின்ற டென்டெர்களுக்காக நம்மில் பலர் கொந்துராத்துக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.     

கே: தமிழின் சிறந்த படைப்பாளியாக நீங்கள் கருதும் ஐந்து பேரின் பெயர்களைச் சொல்லுங்கள்?
இன்றைய இந்த டொப் பைவ் வரிசை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒலிபரப்பாகாது என்பதனை நேயர்களுக்கு வருத்தத்தோடு அறியத் தருகின்றோம்.
 

கே: சாஹித்தியப் பரிசுக்கான தெரிவுகள் நேர்மையாக இடம் பெறுவதாக கருதுகின்றீர்களா? நீங்கள் பரிந்துரை செய்யும் வழி முறைகள்?
சில கேள்விகளுக்கு பதிலளிக்க முன்னர் ஆகக் குறைந்தது இரண்டு பெரஸிட்டமோல்களாவது போட்டு விட வேண்டும். இல்லன்னா பேஜாராயிடும். தற்போதைக்கு கையிருப்பில் பெனடோல்கள் கிடையாது.

கே: புலம் பெயர்ந்தவர்களின் தமிழ்ப் படைப்புகள் குறித்து?
சில டயஸ்போராக்களின் படைப்புகள் மெஹதி ஹஸனின்; துயர் வழியும் கஸல்கள்.

கே: உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான தூரம் எத்தகையது?
இதயத்துக்கும் இரத்தத்துக்குமானது அல்லது காமத்துக்கும் சாமத்துக்குமானது.

கே: சட்டகங்களை உடைத்துக் கொண்டு அது தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் எழுதுவது பற்றி?
ஆடைகளின் டிசைனிங் மாற்றம் என்று சொல்லிக் கொண்டு நிர்வாணமாகத் தெருக்களில் நடப்பது மன நோயின் கூறுகளில் ஒன்று.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X