2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

ஐக்கியமாய் வாழ்வோம்

Editorial   / 2017 டிசெம்பர் 01 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாசம் என்றால் என்னவென்று

பாடம் சொல்லிக் கொடுத்தோமே

பாரினுக்கே

பாடம் சொல்லிக்கொடுத்தோமே

 

ஐக்கியம் என்ற பாடத்தை

அழகாய் சொல்லிக் கொடுத்தோமே

அகிலத்துக்கே

அழகாய்ச் சொல்லிக் கொடுத்தோமே

 

பல நூற்றாண்டுகள்

பாடம் சொல்லிக் கொடுத்தோமே

பக்குவமாய் பாடம் சொல்லிக் கொடுத்தோமே

 

சேர்ந்து வாழும் வகையினை

சீராய் சொல்லிக் கொடுத்தோமே

அகிலத்துக்கே

சீராய் சொல்லிக் கொடுத்தோமே

 

பௌத்தர் ,இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்

பாசமாய் இணைந்தே வாழ்ந்தோமே

பாரே வியக்கும் வண்ணம்

பாசமாய் இணைந்தே வாழ்ந்தோமே

 

சௌசனடயமாய் வாழ்வதை

சகியாதொரு கூட்டம்

சமயத்தின் பெயரைச் சொல்லிக்  கொண்டே

சனங்களை அழிக்கத் தொடங்கியதே

 

மதத்தை காப்போர் என்று சொல்லி

மக்களை அழிக்கத் தொடங்கியதே

மதங்கொண்டு மக்களை அழிக்கத் தொடங்கியதே

 

மதத்தலங்களின் மகிமையை

மதிக்கத்தெரியாதொரு கூட்டம்

மதத்தை காப்போர் என்று சொல்லி

மதத்தலங்களை த்  தேடித்தேடி அழித்ததுவே

 

சமரால் அழிந்தது போதாதென

சாதியின் பெயரைச் சொல்லிக் கொண்டு

சமயத் தலங்களை அழித்ததுவே

 

சாதிமதம் பாராமல்

சண்டை சச்சரவு கொள்ளாமல்

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல்

ஒற்றுமையாக வாழ்ந்த நாம்

விரோதிகள் ​ போல் நோக்கப்பட்டடோமே

 

இந்த நிலை தொடருமானால்

இலங்கையென்ற தேசமே

இல்லாதொழிந்து போய்விடும்

எனவே

 

பகைமை தன்னை அழித்திடுவோம்

பாசம் தன்னை வளர்த்திடுவோம்

ஐக்கியமாக வாழ்ந்திடுவோம்

நம் தேசத்தை கட்டியெழுப்புவோம்

முஸம்மில். எச் .முஹம்மது

(மருதமுனை)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X