Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வில்லிசைப்புலவர் கலாபூஷணம் நா.கணபதிப்பிள்ளை (சின்னமணி) அச்சுவேலி உலவிற்குளம் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (04) காலமானார்.
சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தர கல்வியை ஏழாலை உயர்தர பாடசாலையிலும் கற்றுக் கொண்டார்.
யாழ். கலாசேத்திராவில் வி.கே.செல்லையாவிடம் கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட சின்னமணி, அவரின் வழிகாட்டலுடன் 1949ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற கப்பற்பாட்டு நாடகத்தில் நடித்தார்.
1951ஆம் ஆண்டு முதல் கலையுலகில் நுழைந்த சின்னமணி பல மூத்த பெரும் கலைஞர்களோடு இணைந்து நடித்தார்.
வீரமைந்தன், சரியா தப்பா, தில்பு சுல்தான் ஆகிய சமூக நாடகங்களிலும் காத்தவராயன், அரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி போன்ற சரித்திர நாடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இவர் சிறுவயது தொடக்கம் எல்லோராலும் சின்னமணி என்றே அழைக்கப்பட்டார்.
'துப்பதாகே துக்க' என்ற சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாக்களிலும் பொதுக் கலை நிகழ்வுகளிலும் இடம்பெறும் சின்னமணி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சிகளைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர்.
நாட்டார் கலைகளுக்குப் புத்துயிர்ப்பு வழங்கி அவற்றை மக்கள் நயக்கத்தக்க கலைகளாக வாழச் செய்தவர்.
இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
4 hours ago
8 hours ago