2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

தேசிய விருது பெற்ற பேராசிரியர் சி.மௌனகுருவுக்கு வாழ்த்து தெரிவிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தேசிய இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுக்காக கொடகே நிறுவனத்தினால்  வழங்கப்பட்ட தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்ட பேராசிரியர் சி.மௌனகுருவுக்கு மட்டக்களப்பு - படுவான்கரைப் பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் த.மேகராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'கொழும்பில் அமைந்துள்ள கொடகே நிறுவனம், ஒவ்வொரு வருடமும் தேசிய இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றி, நூல்களை வெளியிட்டு வருகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய சாகித்திய விழாவினை நடத்தி தேசிய சாகித்திய விருதினை வழங்கி வருகின்றது.

அவ்வகையில் 2014 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா இம்மாதம் 4ஆம் திகதி கொழும்பில் பேராசிரியர் வால்டேர் மாறசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதில் பேராசிரியர் சி.மௌனகுருவுக்கு தேசிய சாகித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. இவருடன் இவ்விருது பேராசிரியர் விமல் திசநாயக்க(சிங்களம்) பேராசிரியர் டீ.சி.ஆர்.குணதில (ஆங்கிலம்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் தேசிய இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுக்காக கொடகே நிறுவனம் வாழ்நாளில் ஒருவருக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர் சி.மௌனகுருவுக்கு படுவான்கரைப்பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் அகம் மகிழ்கிறேன்.

எழுத்து, நடிப்பு, பேச்சு ஆகிய துறைகளில் பேராசிரியர் விசேட திறனுடையவர். தமிழ்ர்களின் கலை இலக்கியப் பண்பாட்டை மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் விசேட ஆற்றலுடையவர். இராவணேசன் கூத்தினை பெரியோர்களுக்கு மாத்திரமன்றி இளைய தலைமுறையினரும்  விரும்பத் தக்கவகையில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் மத்தியில் நாடகசாயல் மிக்க கலை நுட்பத்தோடு ஆற்றுகை செய்துவரும் அவரது செயற்பாடு வெகுவாகப் பாராட்டத்தக்கதாகும்.

அவர் இன்றுவரையும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் சென்று தமிழர்களின் கலைப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி வருவதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசம் கலைப் பாரம்பரியங்களும் சடங்கு வழிபாட்டு முறைகளும் மிக்கதாகும்.

இதனை நன்கு புரிந்துகொண்ட பேராசிரியர், படுவான்கரை மட்டக்களப்பின் ஆன்மா என்று தனது உரைகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தமை படுவான்கரைப் பிரதேச கலைப் பாரம்பரியங்கள் மீது கொண்டுள்ள அவதானிப்பினையும் மதிப்பினையும் காட்டுகின்றது.

படுவான்கரைப் பிரதேச கோயில்களில் இரவு நேரங்களில் இடம்பெறும் சடங்கு வழிபாடுகள் கலந்துகொண்டு சாதாரண மக்களும் மிக தெளிவாக விளங்கும் வகையில் எளிமையாக உரைகளை ஆற்றும் அவர், சமஷ்கிரத மயமாக்கல்இ மேலைத்தேய மயமாக்களை எதிர்கொண்டு நம் பண்பாட்டை எவ்வாறு காத்துக்கொள்ளலாம் என்றவகையான கருத்துக்களையெல்லாம் வலியுத்தி வருவது இன்றைய காலத்துக்கு அவசியமானதாகும்.

நவீன காலமாகிய இன்று மேலைத்தேய இசை நிகழ்வுகளையும் அநாகரீக பழக்க, வழக்கங்களையும் முன்னெடுக்க விரும்புகின்ற இளைஞர்களுக்கு பேராசிரியரின் கருத்து முக்கியமானதாகும்' என தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • MR.Habeebullah - seusl oluvil Sunday, 28 December 2014 06:57 AM

    மிகப் பொருத்தமான இன நல்லுறவு மனித நேயம் சிறந்த பண்புகள் என்பவற்றை தன்னகத்தே கொண்ட எனது அன்பு நண்பன் சித்தாந்தன் தந்தை பேராசிரியர் மௌனகுரு sir ஐ தேசிய விருது கிடைத்ததை இட்டு சந்தோசமாக வாழ்த்துகிறேன். ஐயா உங்களின் பணி என்றும் தொடர வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .