2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

விருது வழங்கி கௌரவிப்பு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தவமணிதேவி-குணசேகரம் (அதிபர்) அவர்களுக்கு கடந்த 2013.06.29 அன்று சனிக்கிழமை பிற்பகல் இரத்தினபுரி மாநகரசபை மண்டபத்தில் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட சாமஸ்ரீ தேசியவிருது வழங்கும் விழாவில் நாடளாவிய ரீதியில் இன ஐக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் சமய, சமூக, கலாசார ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்திஜீவிகள் வரிசையிலே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலி பாபா பாறுக் அவர்கள் 'சாமஸ்ரீ தேசமானிய' பட்டம் வழங்கி கௌரவித்தார்.

இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவரும் பயிற்றப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியருமான இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டம் பெற்றவருமாவார்.

தனது ஆசிரியத் தொழிலை நுவரெலியா மாவட்டத்தில் நு.கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்ததுடன் அதிபராக நு.நானுஓயா தமிழ் மகா வித்தியாலயத்திலும் நு.யரவல் தமிழ் வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்.எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்திலும் மட்.பெரியகல்லாறு மெ.மி.த.பெண்கள் பாடசாலையிலும் மட்.களுதாவளை இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலயத்திலும் மட்.வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலத்திலும் கடமையாற்றியதோடு தற்போது மட்.பட்.மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றுகின்றார்.

மட்.பெரியகல்லாறு மெ.மி.த.பெண்கள் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய காலத்தில் தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்திலே முதன்மை இடத்தை இப்பாடசாலை தக்கவைத்துக் கொண்டிருந்தமைக்கும்; தற்போது இப்பாடசாலை வளர்ச்சி பெற்று மிளிர்வதற்கும் காரணமாகத் திகழ்ந்தவர். 

தம்பையா-பாலசிங்கம் அமரர் பொன்னம்பலம்-தங்கமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி-வல்லிபுரம் முருகுப்பிள்ளை-மங்கையற்கரசு தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான 'சாமஸ்ரீ' 'தேசகீர்த்தி' 'தேசஅபிமானிய' வல்லிபுரம்-குணசேகரம ;(அகில இலங்கை சமாதான நீதிவான்) அவர்களின் அன்பு மனைவியான இவர் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய சக்தி நெறி மன்றத்திலும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், சிவில் பாதுகாப்புக் குழு போன்றவற்றிலும் பதவி நிலை வகித்து சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார். என்பதும் சிறப்பம்சமாகும்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .