ஆத்திச்சூடி, சுராங்கனி பாடல்களை தென்னிந்திய சினிமாவில் பாடி மக்கள் மனதில் இடம்பிடித்து, ஆர்யன் போன்ற சிறப்பு அல்பங்களை மக்களுக்காக தந்துஇசை ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஆர்யன் தினேஸ் கனகர்தினத்தின் இசை திறமைக்காகஇசைப்புயல் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு சந்தரப்பம் வழங்கினார். தனது சிறந்த இசைத் தயாரிப்பு முயற்சியான இயக்குநர் மணிரத்தினத்தின் மிகப்பிரமாண்ட வெளியிடான கடல் திரைப்படத்தில் சிறந்த டைட்டில் பாடல் பாடுவதற்கு தினேஸுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.
மீனவ குடுமபத்தின் கதைச் சூழலில் அமைந்த இக்கதை முற்றுமுழுதாக இந்தியாவில் படமாக்கப்பட்டதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தின் டைட்டில் பாடலான 'மகுடி மகுடி' பாடலை எழுதி பாடியிருந்தவர் ஆர்யன் தினேஸ் கனகரத்தினம். ஆனால் இந்தப் பாடல் இத்திரைப்படத்தில் பின்னணியிலேயே அமைந்திருந்தது. இந்த பாடலுக்கு தகுந்த ஒளிவண்ணம் தீட்டவேண்டும் என்பது ஆர்யனின் அவாவாக இருந்தது.
ஜே.ஆர் மீடியா வேர்கின் முழுத்தயாரி;ப்பில், ஆர்யன் தினேஸ் பெருமையுடன் வழங்கும் 'மகுடி' வீடியோ பாடல் மிகவிரைவில் வெளிவரவுள்ளது. இந்த பாடலின் முழு உரிமையும் இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சார்வதோடு, இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கு ஒளிவண்ணம் தீட்டுகிறது கைவ் புறக்ஸ் என்டரடைன்மன்ட்.
இந்த பாடல் காலி மற்றும் கொழும்பு நகர்களில் படமாக்கப்பட்டிருப்பதுடன் சோனி மியூசிக் இந்தியாவின் வெளியீடாக வெளிவரவுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தப்பாடல் வெளியிடப்படும் என்று ஆர்யன் தினேஸின் ஆன்டோ ஸ்டேஜ் முகாமையாளர் பஹத் எம்மிடம் குறிப்பிட்டார்.