Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவீந்திரநாத் தாகூர் இரண்டு தேசிய கீதங்களை இயற்றிய பெருமை மிக்க உன்னத கவிஞன். நோபல் பரிசு பெற்ற இவர் இந்தியாவை உலக இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தவர். கருணையே இவரது சமயம். இவரது 150 ஆவது பிறந்த தினம் அடுத்த ஆண்டு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. கொல்கொத்தாவின் ரவீந்திரநாத் தாகூர் மையத்தின் பணிப்பாளர் டாக்டர் றோபோ சொம்காலி அண்மையில் காலியில் நடந்த இலக்கிய விழாவில் பங்குபற்றுவதற்காக வந்திருந்தார். இவரை டெய்லிமிரர் பத்திரிகைக்காக நேர்காணும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.
டாக்டர் சொம் 'ரவீந்திர சங்கீதத்தில்' பயின்ற ஒரு பாடகி. இவர் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றை 'ரவீந்திரநாத் தாகூர்: கவிஞனும் அவர் பாடலும்' என்னும் நூலாக எழுதியுள்ளார். சரி, இனி அவருடனான நேர்காணலை பார்ப்போம்.
கேள்வி : தாகூர் மீதான கவர்ச்சி எப்படி வந்தது? அவரது கவிதை உங்களை மெய்மறந்து போகுமளவுக்கு கவர்ந்தது ஏன்?
பதில் : நான் மேற்கு வங்காளத்தில் பிறந்தேன். எனது ஊரில் தாகூர் என்பது வீடுகளில் பேசப்படும் பெயராக இருந்தது. அவரது பாடல்களுக்கும் இசைக்கும் நான் ஐந்து வயதிலேயே அறிமுகமானேன். இவரது கவிதைகளை படிக்கப் படிக்க நான் மேலும் மேலும் உணர்வூட்டப்பட்டேன். நான் வளர என் வாழ்வும் பல மாற்றங்களை கண்டது. நான் ஓர் இராஜதந்திரியை திருமணம் செய்தேன். உலகெங்கும் பயணித்தேன். ஆனால் தாகூர் என்ற ஒன்று மட்டும் மாறவில்லை.
கேள்வி: அண்மையில் ஒரு இந்திய பத்திரிகை அநேகமான தாகூரின் படைப்புகள் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை என கூறியிருந்ததற்;கான காரணம் என்ன?
பதில்: தாகூரின் மரணத்தின் பின் 60 ஆண்டுகாலமாக அவரின் படைப்புகளுக்கான பதிப்புரிமை விஸ்வபாரதி பல்கலைகழகத்திடமே இருந்தது. 2001 இல் தான் பதிப்புரிமை நீக்கப்பட்டது. இப்போது தாகூரின் பாடல்களின் மொழிபெயர்ப்புகளும், அவற்றுக்கான புதிய விளக்கங்களும் வெளிவருகின்றன.
கேள்வி: பதிப்புரிமை நீக்கப்பட்ட நிலையில் தாகூரின் படைப்புகளை வங்காளி மொழி பேசுபவர்களுக்கும் அப்பால் கொண்டு செல்ல என்ன செய்யப்படுகின்றது?
பதில்: நான் முன்பு கூறியது போலவே மொழிபெயர்ப்பாளர்களும் விமர்சகர்களும், தாகூரின் படைப்புகளை உலகுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றனர். அவரின் பாடல்களும் கவிதைகளும் பல சர்வதேச மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகின்றன. தாகூர் ஒரு சர்வதேச மனிதர். உலகெங்கும் அவருக்கு இரசிகர்கள் உள்ளனர். தாகூர் ஒப்பிலாத கவிஞராக இருந்தாலும் அவரது இசையே முழு நாட்டையும் அதிசயிக்க வைத்தது.
எனவே அவரது இசையை உலகறிய செய்ய பல மேற்கத்தேய நாடுகளிலும் இசை நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி வருகின்றோம். இவற்றுக்கு மேலாக தாகூர் ஒரு சிறந்த ஓவியர். அவரது ஓவியங்களை அரவது இரசிகர்கள் பார்ப்பதற்காக உலகெங்கும் அனுப்பவுள்ளோம்.
கேள்வி: 'ரவீந்தரநாத் தாகூர்: பாடகரும் அவரது பாடலும்' என்னும் நூலை எழுதியுள்ளீர்கள். அதைப் பற்றி கூறுங்கள். அதை எழுத தூண்டியது என்ன?
பதில்: அது வாழ்க்கை வரலாற்று நூல். அவரது கவிதை, நாவல்கள் மற்றும் ஒவியங்கள் யாவற்றிலும் அவரது இசை இழையோடுகிறது. எனவே தான் நான், வாசகர்கள் அவரது இசையினூடாக அவரை காண வேண்டும் என விரும்புகின்றேன். தாகூர் 2000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். நான் அவரது பாடல்களில் பலவகையிலிருந்தும் தெரிந்தெடுத்து அவரது பல்துறை திறன், அவரது இசையின் சக்தி என்பவற்றை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளேன்.
கேள்வி: இலங்கையிலுள்ள தாகூரின் ரசிகர்களிடமிருந்து எவ்வகையான துலங்கலை நீங்கள் பெறுகிறீர்கள்?
பதில்: காலி இலக்கிய விழாவில் பெருங்கூட்டமொன்று என்னை சூழ்ந்து கேள்விக்கணைகளை தொடுத்தது. இது என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த விடயமாகும். எனது புத்தகம் கொஞ்ச நேரத்தில் விற்று முடிந்தது. தாகூர் மூன்று முறை இலங்கை வந்துள்ளார். இதனால் போலும் எமக்கிடையே உணர்வுபூர்வமாக உறவுகள் உண்டு.
கேள்வி: தாகூரின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் எவ்வாறு கொண்டாடப்படவுள்ளது?
பதில்: அவரது 150ஆவது ஆண்டு பூர்த்தி மே 2012 இல் வருகின்றது. இதையொட்டி பல கலை நிகழ்வுகளையும்இ அவரின் சித்திரங்களின் பொருட்காட்சியையும் பல நாடுகளில் நடத்தவுள்ளோம். இவற்றினூடாக தாகூரின் கருணைஇ சமத்துவம் என்னும் செய்திகளை உலகெங்கும் பரப்புவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகி;ன்றோம்.
நேர்காணல்:- டெய்லிமிரர் ஊடகவியலாளர் தௌபதி கௌசல்யா
படம்:- பிரதீப் பத்திரண
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago