2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

வழித்துணை நூல் வெளியீடு

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் தொழில்சார் உளநல நிலையமும் இணைந்து நடாத்தும் ஆலோசனை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வும் 'வழித்துணை' நூல் வெளியீடும் இன்று(07) மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன்  தலைமையில்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வின்போது  தொழில்சார் உளநல பயிற்சிகளை முடித்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்  எஸ் .மனோகரன் , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு  யேசு சபை மற்றும் தொழில்சார உளநல நிலைய பணிப்பாளர்  வணபிதா .போல் சற்குணநாயகம் , காத்தான்குடி உளநல வைத்திய அதிகாரி வைத்தியர்  திருமதி . எஸ் . பரமகுருநாதன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் , உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர்  என் . லவக்குமார்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X