2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

வருடாந்த மாநாடும் ஓய்வுபெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பும்

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்   

கிழக்கு மாகாண நூலகப் பணியாளர்களின் வருடாந்த மாநாடும் ஓய்வுபெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பு விழாவும், மட்டக்களப்பு மாநகர சபையின் நூலக மாநாட்டு மண்டபத்தில், நாளை (20) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  

கிழக்கு மாகாண நூலகப் பணியாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ரீ.சபறுல்லாகான் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில்,

வரவேற்புரையை ஒன்றியத்தின் செயலாளர் க.வரதகுமார் வழங்கவுள்ளார். இதன்போது ஓய்வுபெற்ற நூலகர்கள் பாராட்டிக் கெளரவிக்க ப்படவுள்ளனர்.  

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.மணிவண்ணன், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களான, கே.சித்திரவேல், எஸ்.சுதாகரன்,
ஏ.ரீ.எம்.றாஃபி மற்றும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எம்.ஆர்.எப்.றிப்கா சபீன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .