Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக் கல்விமானும் சமூக செயற்பாட்டாளருமான அமரர் எஸ்.திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, ஹட்டன் நகர சபை மண்டபத்தில், எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மற்றும் கனடா தாய்வீடு சஞ்சிகை இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
மன்றத்தின் தலைவர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
மற்றும் சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.தாயுமானவன், எழுத்தாளர் மொழிவரதன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் கே.மெய்யநாதன், சூரியகாந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவக்குமாரன், எழுத்தாளரும் ஆய்வாளருமான எஸ்.தவச்செல்வன், ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் பி.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துக்கொள்கின்றனர்.
அறிமுகவுரையை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.வாமதேவன், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் பற்றிய ஆய்வுரைகளை முறையே மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம், சு.முரளிதரன் (கவிஞர், கல்விப் பணிப்பாளர்) ஆகியோர் நிகழ்த்த, கருத்துரையை ஜி.சேனாதிராஜாவும் (இணைச் செயலாளர். ம.எ.ம ) வாழ்த்துரையைக் கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் அந்தனி ஜீவாவும் நிகழ்த்துவார்.
மற்றும் வரவேற்புரையை கவிதாயினி வழங்குவார் என்பதுடன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை லுணுகலை ஸ்ரீ முன்னெடுப்பார். நன்றிவுரையை மன்றத்தின் இணைச்செயலாளரான இரா.சடகோபன் ஆற்றுவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago