Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காயத்திரி விக்கினேஸ்வரன்
சமூக நலன்புரி மற்றும் வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய, சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் சிறுவர் இல்லக்காப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட மருத்துவ இசைப் பயிலரங்கு, கிளிநொச்சியில் புதன்கிழமை (27) இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் இசைத்துறைத் தலைவருமான கலாநிதி ஸ்ரீ தர்ஷனன் வளவாளராகக் கலந்துகொண்டு மருத்துவ இசை மூலம் சிறுவர்களை ஆற்றுப்படுத்தல் பற்றிய பயிற்சிகளை வழங்கினார்.
இப்பயிலரங்கில் எல்லோராலும் இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய மருத்துவ இசைப்பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தாம் இப்புதிய சிந்தனைகளைத் தத்தமது நிறுவனங்களில் செயற்படுவதில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டுள்ளதாகவும் பயிற்சி பெற்றவர்கள் ஏகமனதாகத் தெரிவித்தனர்.
மேற்படி பயிலரங்கில் ஸ்ரீதர்ஷனன் தெரிவித்ததாவது, 'இசையை இறைவன் தோற்றுவித்தாரே தவிர, அவை கர்நாடக இசையையோ அல்லது மேலைத்தேய இசையையோ தோற்றுவிக்கவில்லை. இப்பிரிவினைகளெல்லாம் மனிதரால் தோற்றுவிக்கப்பட்டவை. மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவற்றை விட ஆண்டவனால் தோற்றுவிக்கப்பட்டவை அளவில்லாத சக்தி வாய்ந்த, நித்தியமானவை. ஆண்டவன் தோற்றுவித்த இசையில் பிரிவினைவாதம், மதவாதம், இனவாதம், பிரதேசவாதம், மொழிவாதம் என எதுவும் இல்லை. அவ்வாறான தூய்மையான இசையே மருத்துவத் தேவைகளுக்காக எந்தநாட்டு மக்களாலும் பயன்படுத்தக்கூடியது.
அவ்வாறான இசையிலே நாம் பயிற்சி பெறுதல் நாட்டுக்கும் மக்களுக்கும் உலகிற்கும் ஆரோக்கியம் தரும். மொழி, குரல், பாடல் வரிகள், ஸ்வரங்கள், ஸ்ருதி, தாளம் என நீண்டு கொண்டுச் செல்லும் இவையெல்லாம் கருவிகளேயன்றி இவையெல்லாம் மருத்துவ இசையாகாது.
இசை மருத்துவரினதும் நோயாளியினதும் உயிரில் கலந்த உணர்வாக உள்நுழைந்து உள்ளும் புறமும் அதுவாகவே இரு தரப்பினரையும் ஆக்கிவிடும். இவ்வாறு நிகழும் போது மேற்சொன்ன கருவிகளின் பயன்பாடுகள் எல்லாம் முடிவடைந்திருக்கும். இப்போது உணர்வே நிலைத்து நிற்கும். உயிருடன் கலந்து நிற்கும் அவ்வாறானதொரு மருத்துவ இசையைத் தோற்றுவிப்பதற்கான பயிற்சியின் முதலாவது கட்டம் இப்பயிலரங்கில் நிறைவடைந்திருக்கின்றது. இப்பயிலரங்கில் கலந்து கொண்ட ஒவ்வொருவரினாலும் இதனைச் செயற்படுத்த முடியும்' எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago