2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

புகழ் பூத்த திருத்தலங்கள் நூல் வெளியீட்டு விழா...!

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

எமுத்தாளர் பா. சிவஜெயன் எமுதிய திருகோணமலை மாவட்ட புகழ் பூத்த திருத்தலங்கள் என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா 17 - 12 - 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை ஜீபிலி மண்டபத்தில் ஆசிரியையும், எமுத்தாளருமான திருமதி ஜெ. மதிவதனி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை அதிதியாகவும், பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் . துரைரெட்ணசிங்கமும், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்கள் வேதாகமமாமணி சோ. இரவிச்சந்திரகுருக்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வரவேற்புரையை ஊடகவியலாளர் . அச்சுதன் வழங்க,  வெளியீட்டு உரையையும் நூலின் அறிமுக உரையையும் திருகோணமலை முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இரா. ஸ்ரீ. ஞானேஸ்வரன் நிகழ்த்த, ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூலாசிரியர் பா. சிவஜெயன் நிகழ்த்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .