Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (29) பிரதேச கலை இலக்கிய விழா நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தியிருந்த பாடசாலை மட்ட மற்றும் திறந்த மட்ட இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் அதிதிகளால் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நவப்பிரியா பிரசாந்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அதிதிகளாக அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், திவிநெகும மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம் மற்றும் பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பசீல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago